Published on 21/08/2019 | Edited on 21/08/2019
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் மாணவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்த போது, அரசியலில் தனிமனித தாக்குதலைத் துவக்கி வைத்ததே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். நாகரீகம் இல்லாமல் எதிர்க்கட்சியினரை விமர்சனம் செய்து வருகிறார்.
அவருடைய தந்தை கூட இலை மறை காயாய் தான் எதிர் காட்சிகளை பேசுவார். எனவே ஸ்டாலின் நாவை அடக்க வேண்டும். வி.பி துரைசாமி உள்ளிட்ட தி.மு.கவினர் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' கூறினார். மேலும் தகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால் நான் தான் முதலிடம் பிடிப்பேன் ,அதனால் தி.மு.கவினர் நாவை அடக்கிக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் நாங்களும் பேசத் தயார். இல்லை என்றால் நாங்களும் பேசுவதற்குத் தயார் என்று கூறியுள்ளார்.