கம்பம் அருகே சின்னமனுரில் இந்து முன்னணியினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பேசிய தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், நாம் அனைவரும் ஒற்றுமையாக, வலிமையாக புதிய இந்தியாவையும், புதிய பாரத்தையும் உருவாக்க பட வேண்டும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், இது ஒரு பாதுகாப்பான பாரதம். உலக நாடுகளில் இந்தியா ஒரு வல்லரசு நாடக உருவாக வேண்டும் என்பதற்காக, நமக்குள்ள இருக்கின்ற ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். அதை தொடர்ந்து பேசிய ரவீந்திரநாத், நாம் முதலில் இந்து அப்புறம் தான் மற்ற எல்லாம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்று அதிரடியாக பேசியுள்ளார்.
ஏற்கனவே, அதிமுக கட்சியினர் முத்தலாக் மசோதாவில் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்த போதும், மக்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு கொடுத்தது அதிமுக கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நான் இந்து அப்புறம் தான் எல்லாம் என்று ஓபிஎஸ் மகன் பேசியது மீண்டும் அரசியலில் பரபரப்பாகி உள்ளது. இந்நிலையல், அவரின் இந்து என்ற கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு திரு.ரவீந்திரநாத் பேசினால் அது தவறா. வெட்கம்" என்று தெரிவித்துள்ளார்.
கஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம். ஆனால் காவித் துண்டு போட்டு திரு.ரவீந்திரநாத் பேசினால் அது தவறா. வெட்கம்.@ThanthiTV
— H Raja (@HRajaBJP) September 6, 2019