Skip to main content

ப.சிதம்பரத்தை கைது செய்து விட்டு காரணம் தேடும் சிபிஐ? அதிருப்தியில் காங்கிரஸ்!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை, டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை மேலும் ஒரு நாள் நாளை வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார். ஏற்கனவே சிபிஐ காவலை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர்- 5 ஆம் தேதி வரை நீட்டித்தும், ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.
 

congress



இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும் போது, ப.சிதம்பரத்தை கைது செய்துவிட்டு காரணத்தை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிமிடம் வரை சிபிஐயால், எந்த குற்றச்சாட்டையும் ப.சிதம்பரத்திற்கு எதிராக வைக்க முடியவில்லை. காரணம், எந்தக் குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை.சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' எனக் கூறியுள்ளார். மேலும் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் பொருளாதார மந்த நிலையை மறைக்க சிதம்பரத்தை கைது செய்துள்ளனர் என்று எதிர் கட்சியினர் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இன்னும் சிலர் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது அமித்ஷாவை கைது செய்ததால் பழிவாங்குகின்றனர் என்றும் கூறிவருகின்றனர். பாஜக அரசின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸில் இருக்கும் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் நேற்று இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் செல்வதால் சிதம்பரம் செய்தியாளர்களிடம் 5% என்று கூறியிருப்பது பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்