சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சங்ககிரி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜன், ஓமலூர் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மணி, ஆத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.ஜெய்சங்கரன், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. கூட்டணியின் பா.ம.க. வேட்பாளர் சதாசிவம், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கடாஜலம், சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் பாலசுப்ரமணியன், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜமுத்து, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் சித்ரா, கெங்கவல்லி (தனி) சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பி, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் அருள் ஆகியோரை ஆதரித்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது; "பொய் சொல்வதிலேயே குறியாக இருப்பவர் மு.க.ஸ்டாலின். திருமண நிதியுதவி திட்டத்தில் உதவித்தொகை ரூபாய் 50,000- லிருந்து ரூபாய் 60,000- ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும். குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சிசெய்து வருகிறார். தமிழ்நாட்டில் இதுவரை 6.5 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. 2023- ஆம் ஆண்டுக்குள் வீடற்ற, ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். நாங்கள் எதைப் பேசினாலும் புள்ளி விவரங்களுடன்தான் பேசுவோம். தி.மு.க. தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு; அது செல்லாது; அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் செல்லும்" என்றார்.