எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுபடியும் மீடியாவில் முகம் காட்டி, மாண்புமிகு முதல்வர் என்று புகழாரம் சூட்டியிருப்பது பற்றி விசாரித்தோம். விஜயபாஸ்கர் திடீர் என்று முகம் காட்ட, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சைலன்ட்டாக திடீர் என்று மாறியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொருவரையும் புரமோட் பண்ண ஒரு லாபியும், புகார் பண்ண ஒரு லாபியும் தீவிரமாக வேலை செய்கின்றனர். பீலா ராஜேஷ் மாஸ்க் போடாமல் பேட்டி கொடுக்கிறார். டெல்லி மாநாட்டின் மூலம் தொற்று என்று அவர் கொடுத்த புள்ளிவிவரங்கள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதால், மதரீதியான சிக்கலை உருவாக்குகிறது என்று முதல்வர் வரைக்கும் புகார் சென்றுள்ளது.
மேலும் கரோனா உபகரணக் கொள்முதலில் நடந்திருக்கும் ஊழல்கள் பற்றி வெளியான செய்திகளும் அரசுத் தரப்பை ரொம்பவே அதிர வைத்துள்ளது. இதெல்லாம் இந்த நேரத்தில் பெருசானால் ஆட்சியின் இமேஜ் டேமேஜாகும். அதைச் சமாளிக்கனும்னா, அமைச்சர் விஜயபாஸ்கர்தான் சரியானவர் என்று ஃபீல்டில் இறக்கிவிட்டார் எடப்பாடி.
அதோடு, அமைச்சர் பேட்டி கொடுக்கும் டி.எம்.எஸ். அலுவலகத்திலும், கரோனாப் பதட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் இருக்கும் நாசர் என்ற டைபிஸ்டுக்கு கரோனாத் தொற்று உறுதியாகி இருக்கிறது. டெல்லி மாநாட்டுக்குச் சென்று விட்டு வந்த அவரோட மைத்துனர் மூலமாக நாசருக்கு இது ஏற்பட்டதாத் தெரியவந்துள்ளது. இதை அறியாமல், கடந்த 20 நாளாக அவர் அலுவலகத்துக்கு வந்து போனதால், டி.எம்.எஸ்.சில் யார் யாருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதோ எனப் பதட்டமும் பீதியும் ஏற்பட்டிருக்கிறது. இதைக் கவனித்த உளவுத்துறை, டி.எம்.எஸ்.சுக்கு வந்துசெல்லும் அமைச்சர் விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் உள்ளிட்ட அத்தனை பேரும் பரிசோதனைக்கு ஆளாக வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், அமைச்சர் உங்களையும் சந்தித்திருப்பதால் நீங்களும் உடனடியாகப் பரிசோதிச்சிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடிக்கு, ஹாட் ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது உளவுத்துறை.