சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு அ.தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. இதில் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழுவில் ஒப்புதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து, செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய பொதுக்குழு தீர்மானம் நிறைவேறுகிறது. பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது தர பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதேபோல், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்ய தீர்மானம் வர வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளரைத் தேர்தல் மூலம் தேர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர்