Published on 25/03/2019 | Edited on 25/03/2019

மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பாக ராஜ் சத்யன் என்பவர் போட்டியிடுகிறார். தற்போது அவர்மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ததால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளன.