வரும் மே 19ஆம் தேதி நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேரதல் நடைபெற உள்ளது. மே 23ஆம் தேதி 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. அதிமுக ஆட்சி நீடிக்குமா, ஆட்சி மாற்றம் வருமா, கலையுமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்களை தக்க வைக்கவும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
![Edappadi K. Palaniswami](http://image.nakkheeran.in/cdn/farfuture/2KDG1gT7ZEYXe71OV5TYbHH28pCn1fGiSYoEEgbhrs0/1558162404/sites/default/files/inline-images/401_9.jpg)
இந்த நிலையில் மாதாம் தோறும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மாவட்ட மந்திரிகள் மூலம் கட்டிங் போறது வழக்கம். ஆனால் கடந்த மூன்று மாதமாக இது போகலையாம். அதிருப்தியடைஞ்ச எம்எல்ஏக்கள், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த விவகாரத்தைக் கொண்டுபோயிருக்கிறார்கள்.
மாத மாதம் வரும் மாமூல் எங்கே என்று கேட்டு போர்க்கொடி தூக்கியிருக்கியிருக்கிறார்கள். அவரோ இதுதொடர்பாக மந்திரிகளிடிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள், இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிகம் செலவு செய்ததால் அவர்களை கவனிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
இதனை எம்எல்ஏக்களுக்கு புரிய வைத்த முதல் அமைச்சர், கவலைப்படாதீங்க உங்களுக்கு உரியது வந்தே தீரும் என்று சீக்ரெட்டா சமாதானப்படுத்தியிருக்கிறார்.