



திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அதிமுக நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் இணைந்தது கோபிச்செட்டிபாளையம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 16.12.2020 புதன்கிழமை மாலை, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி, டி.என்.பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஓ.எஸ்.மனோகரன் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கிளை மேலவை பிரதிநிதி கே.கருப்பசாமி, தனபதி ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.
தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியம், டி.என்.பாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர் எம்.சிவபாலன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் காணி வேலுச்சாமி, கொங்கர்பாளையம் ஊராட்சி செயலாளர் சண்முகம், உடையப்பாகவுண்டன் பாளையம் ஊராட்சி செயலாளர் ராசு, ஒன்றிய பொருளாளர் கார்த்தி, உடையப்பாகவுண்டன்பாளையம் ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.