அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கிய நிலையில், போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அதிமுக- பா.ம.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. சார்பில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி. ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, பாலு, தன்ராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பேச்சுவார்த்தையின் முடிவில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பா.ம.க. போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொகுதிகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கும்மிடிப்பூண்டி, திருப்போரூர், திருத்தணி, செங்கல்பட்டு, விக்கிரவாண்டி, சங்கராபுரம், ஆரணி, பென்னாகரம், வீரபாண்டி, காட்டுமன்னார் கோவில், அணைக்கட்டு, பாப்பிரெட்டிப்பட்டி, ஓசூர், நெய்வேலி, கலசப்பாக்கம், குன்னம், சோளிங்கர், பண்ருட்டி, ஜெயங்கொண்டம், ஆற்காடு, மேட்டூர், திண்டிவனம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட பா.ம.க. விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.