மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று பலர் பணமதிப்பிழப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மிகப்பெரிய வெற்றி. 2016-17ல் வங்கிகளில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுக்களின் மதிப்பு 43.47 கோடி, 2017-18ல் 23.35 கோடி, 2018-19ல் 8.24 கோடி . “நம்ம நாட்டு ₹நோட்டு அடிக்கிற மிஷினை பாகிஸ்தானுக்கு வித்தவங்களால் வந்த கோளாறு சரி செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.


#demonetization மிகப்பெரிய வெற்றி. ??????2016-17ல் வங்கிகளில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுக்களின் மதிப்பு 43.47 கோடி, 2017-18ல் 23.35 கோடி, 2018-19ல் 8.24 கோடி . “நம்ம நாட்டு ₹நோட்டு அடிக்கிற மிஷினை பாகிஸ்தானுக்கு வித்தவங்களால் வந்த கோளாறு சரி செய்யப்படுகிறது.
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) November 9, 2019
நீங்கதான் மெச்சிக்கணும் சார். அந்த மாசம் என் கண்ணெதிரே சில திடீர் பணக்காரங்க உருவானாங்க. நகை விற்பனை அமோகம். மத்தபடி நீங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்கல. என் அனுபவத்துல, லஞ்சம், வரி ஏய்ப்பு, cash transaction எல்லாம் 2 மடங்கு ஆயிடிச்சு- 1000 ருபாய் நாட்டுக்கு பதில் 2000 ரூ நோட்டு !
— Kasturi Shankar (@KasthuriShankar) November 9, 2019
இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கதான் மெச்சிக்கணும் சார். அந்த மாசம் என் கண்ணெதிரே சில திடீர் பணக்காரங்க உருவானாங்க. நகை விற்பனை அமோகம். மத்தபடி நீங்க சொன்ன மாதிரி எதுவும் நடக்கல. என் அனுபவத்துல, லஞ்சம், வரி ஏய்ப்பு, cash transaction எல்லாம் 2 மடங்கு ஆயிடிச்சு- 1000 ருபாய் நாட்டுக்கு பதில் 2000 ரூ நோட்டு என்று கருத்து தெரிவித்துள்ளார்.