உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக அதிகரித்துள்ளது. 180- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,21,413 ஆக அதிகரித்துள்ள நிலையில், கரோனா பதிப்பில் இருந்து 1,08,388 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536லிருந்து 562 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள் 519 பேருக்கும், வெளிநாட்டினர் 43 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நீங்களும் அலட்சியமாக இருந்து விடாமல் வீட்டிலேயே இருங்கள். pic.twitter.com/UKOCM7QeKA
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) March 24, 2020
இந்தநிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் கரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், " நான் வீட்டில் இருக்கிறேன். எனக்காக, என் நாட்டிற்க்காக, என் மக்களுக்காக அது போல் நீங்களும் அலட்சியமாக இருந்து விடாமல் வீட்டிலேயே இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு பிரதமர் மோடி கருத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் உங்கள் நலனையும், உங்கள் குடும்பத்தார் நலனையும் பாதுகாத்து சட்டத்தையும் மதித்து நடப்பீர். 21 நாட்கள் அடைப்பு என்பது மிகவும் நீளமானது. ஆனால் இந்த காலகட்டம் நமது உயிர் காக்க மிகவும் அவசியம்.நீங்கள் வீட்டைவிட்டு வெளியே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கொரோனா வைரசை பாதிக்கப்பட்டும், கடத்தும் மோசமான நடவடிக்கையில் இறங்குவீர்கள். ஆகவே வீட்டிற்குள்ளேயே இருங்கள் குறிப்பிட்டுள்ளார்.