உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,166 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,069 லிருந்து 2,301 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 335, தமிழ்நாடு 309, கேரளா 286, டெல்லி 219, ஆந்திர பிரதேசம் 132, ராஜஸ்தான் 133, கர்நாடகா 124, உத்தரப்பிரதேசம் 113, தெலங்கானா 107, மத்தியப்பிரதேசம் 99 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 லிருந்து 56 ஆக உயர்ந்துள்ளது.கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 156 லிருந்து 157 ஆனது.இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரானா தடுப்புக்கு தள்ளி நிக்கச்சென்னா இந்த அறிவாளி எல்லாரையும் அரவணைத்து செல்ல சொல்றாரு. pic.twitter.com/rWif6VKtpV
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) April 2, 2020
இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி. சேகர், திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது திராவிட கழகத் தலைவர் வீரமணி வெளியிட்ட அறிக்கையில்,திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது போல் வீடியோ கான்பரன்ஸ் மூலமாவது அனைத்து கட்சிகளின் கருத்தை அறியவேண்டியது தமிழக அரசின் கடமை.இதில் வீண் ஜம்பம், கவுரவம் பார்க்கக்கூடாது. இந்த நேரத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கொரானா தடுப்புக்குத் தள்ளி நிக்கச் சொன்னா இந்த அறிவாளி எல்லாரையும் அரவணைத்து செல்லச் சொல்றாரு" என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துக்கு திராவிட கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.