அதிகப்படியான தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என தேசிய உணவக ஆணையம் ஜொமேட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
![zomato swiggy offers may no longer available](http://image.nakkheeran.in/cdn/farfuture/QEGGD0FiuyogpYv_-ONuRAcfJi1L47wgcnb4hVJbeSQ/1566898345/sites/default/files/inline-images/szf.jpg)
உணவக நிர்வாகிகள் தரப்பிலிருந்து ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான தள்ளுபடி வழங்குவதால் ஏற்பட்ட பாதிப்பு, கமிஷன் பிரச்னை, அழுத்தம் எனப் பல புகார்கள் தேசிய உணவு ஆணையத்துக்கு தொடர்ந்து வந்தவண்ணம் இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பண்டிகை நாட்கள் போன்ற எதாவது சில நாட்களுக்கு மட்டும் சலுகைகளை அறிவித்து, மற்ற நாட்களில் எப்போதும் உள்ள விலைகளிலேயே டெலிவரி செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள தேசிய உணவு ஆணைய தலைவர் அனுராக் கட்ரியார், "நாங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு எதிராக செயல்படவில்லை. அனால் இதுபோன்ற சலுகைகளால் தேவையற்ற மேலாதிக்கம் ஏற்படுவதாலேயே நாங்கள் தலையிடுகிறோம்" என தெரிவித்துள்ளார்.