கடந்த மே மாதம் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி. முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ஜெகன்.
அந்த வகையில் அவரது முக்கிய தேர்தல் வாக்குறுதியான, இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பது தொடர்பாக தற்போது மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவின்படி இனி அம்மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் உள்ள 75 சதவீத பணிகள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்க வேண்டும் என ஆவணம் செய்யப்படும்.
இதற்கான மசோதா தற்போது அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து அம்மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த மசோதா மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், இது ஆந்திர மாநில வரலாற்றில் மிகமுக்கிய முடிவாகும், ஆந்திராவில் புதிய புரட்சி என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.