Skip to main content

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் கலக்கும் இளம் பெண்கள்...!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Young women to contest in Kerala local body elections ...!

 

 

எல்லாத்துறைகளிலும் 50/50 கேட்கும் பெண்களுக்கு கேரளாவில் நடக்கயிருக்கும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட பெண்களுக்கு ஆண்களுக்கு சமமாக 50 சதவித இடத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் அங்குள்ள பிரதான கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பா.ஜ.க. அதுவும், போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கும் 90 சதவிகித பெண்களுக்கு வயது 20-ல் இருந்து 25 வயதுக்குள்தான் என்பது  ஆச்சர்யமான விஷயம்.

 

கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில்  உள்ளாட்சித் தேர்தல் வருகிற 8, 10, 14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடக்கிறது. இதில் தலைநகரமான திருவனந்தபுரம் மாவட்டத்தில் 6,402 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 3,329 பெண்களும் 3,073 ஆண்களும் ஆவர்கள். அதில் கிராம பஞ்சாயத்து வார்டுகளில் போட்டியிடும்  4,710 பேரில் பெண்கள் 2,464 பேரும், ஆண்கள் 2,246 பேரும் உள்ளனர். அதேபோல் ஒன்றிய வார்டுகளில் 523 பேரில் பெண்கள் 266 பேரும், ஆண்கள் 257 பேரும் போட்டியிடுகின்றனர்.

 

Young women to contest in Kerala local body elections ...!

 

மாவட்ட பஞ்சாயத்தை பொறுத்தவரை 97 பேரில் 51 ஆண்கள், 46 பெண்கள் ஆவார்கள். திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 556 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 278 பெண்களும் 278 ஆண்களும் ஆவார்கள். நகர சபையில் 516 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 274 பெண்களும் 242 ஆண்களும் என மொத்தத்தில் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் உள்ளனர்.

 

இங்கு போட்டியிடும் பெண்களில் பெரும்பாலானோர் முதல் முதலாக தேர்தல் களத்தில் நிற்கும் படித்த பட்டதாரி இளம் பெண்களாகும். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எஃப்.ஐ., இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்..ஐ., காங்கிரசின் மாணவர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் அதேபோல் பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மற்றும் இளைஞரணியை சேர்ந்தவர்கள்.

 

Young women to contest in Kerala local body elections ...!


இந்த இளம் பெண்கள், பிரச்சாரத்துக்கு செல்லும்போது அவர்களுடன் இளைஞர்களும் அதிகமாக செல்கின்றனர். அந்த வேட்பாளர்களுடன் செல்ஃபி எடுப்பதுடன் அதை சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர். மேலும் உள்ளாட்சித் தேர்தலா அல்லது அரசியில் கட்சிகள் நடத்தும் அழகிப் போட்டியா என்றெல்லாம் இணையவாசிகள் பதிவிட்டுவருகின்றனர். இந்த நிலையில், கேரளா தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் குறித்து இந்த மாதிரி சமூக வலைதளங்களில் போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்