Published on 28/07/2018 | Edited on 28/07/2018

ஹரியானவை சேர்ந்த 17வயது மாணவி ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை உச்சியை தொட்டு சாதனை படைத்துள்ளார்.
ஹரியானவில் கிராஸ் நகரத்தை சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதாக் இவர் ஏற்கனவே எவர்ஸ்ட் சிகரத்தை சிறு வயத்தில் தொட்ட இளம் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது அந்த சாதனையின் இன்னொரு மயில் கல்லாக ஆப்ரிக்காவின் கிளிமாஞ்சாரோ மலை சிகரத்தை மூன்றே நாட்களில் அடைந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை குறித்து அவர் செய்தியர்களிடம் கூறுகையில் '' நான் எப்பொழுதுமே கூட்டத்தில் தனியாக தெரியும் சாதனை பெண்ணாகவே இருக்க நினைப்பேன். இந்த சாதனைக்கு தங்குதடையின்றி எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த என் குடும்பத்தாருக்கு நன்றி, எனது இந்த சாதனை விரைவில் ஆக்கபூர்வமாக வெளிவரும், எனது அடுத்த இலக்கு யூரோப் மலை சிகரத்தை தொடுவதுதான் என குறிப்பிட்டுள்ளார்.