Published on 17/05/2019 | Edited on 17/05/2019
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை மீட்ட உறவினர்கள் இவரைக் காப்பாற்ற அம்மாநிலத்தில் உள்ள JN மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அபோது நடைபெற்ற சிகிச்சையின் போது யாரும் எதிர்பாராத விதமாக வாய் வெடித்து இளம்பெண் ஒருவர் இறந்துள்ளார்.அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்பு இது பற்றி மருத்துவர்கள் கூறும் போது : தற்கொலைக்கு முயற்சித்த இளம்பெண் கந்தக அமிலம் குடித்திருக்க வேண்டும் அதனால் தான் சிகிச்சையின் போது அவரது வாயில் ஆக்ஸிஜன் குழாய் வைக்கப்பட்டபொழுது வேதிமாற்றத்தினால் அவரது வாயில் வெடிவிபத்து நிகழ்ந்தது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.