உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று கோரக்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின்படி அவருக்கு 1 கோடியே 54 லட்சத்து 94 ஆயிரத்து 054 ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் கையிலிருக்கும் பணம், ஆறு வங்கி கணக்குகளில் உள்ள பணம் மற்றும் சேமிப்பு ஆகியவை அடங்கும்.
49,000 மதிப்புள்ள 20 கிராம் எடையிலான தங்க காதணியும், 20,000 மதிப்புள்ள 10 கிராம் எடையிலான ருத்ராட்சத்தோடு கூடிய தங்க செயினும், 12,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போனும் வைத்திருப்பதாக தனது பிரமாண பாத்திரத்தில் குறிப்பிட்டுள்ள யோகி ஆதித்யநாத், 1 லட்சம் மதிப்புள்ள ரிவால்வரும், 80 ஆயிரம் மதிப்புள்ள ரைபிளும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.