Skip to main content

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..?

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

 

fghgfhgf

 

புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அதுபோல ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் போர் பதட்டமும் அதிகரித்தது. இந்நிலையில் இந்த தாக்குதலில் இறந்த உத்தரபிரதேச வீரரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட யோகி ஆதித்யநாத் அங்கு சிறிது பேசிக்கொண்டிருந்தார் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் யோகிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது இந்த வீடியோ குறித்த உண்மை செய்து தெரியவந்துள்ளது. அதன்படி இந்த வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் இறுதிச் சடங்கில் எடுக்கப்பட்டது எனவும் அதில் யோகி ஆதித்யநாத்துடன் பிகார் ஆளுநர் லால்ஜி டண்டன், உத்தரப்பிரதேச அமைச்சர்கள் அஷுடோஷ் டண்டன் மற்றும் மோசின் ராசா ஆகியோரும் இருப்பது தெரிகிறது. இந்நிலையில் இப்போது இறந்தது யாராக இருந்தாலும் இறுதி சடங்கில் சென்று சிரிப்பது தவறான விஷயமே என கருத்துக்கள் எழ ஆரம்பித்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்