முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிபின் ராவத் பொறுப்பேற்று கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், "முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும். முப்படைகளிடம் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி சிறந்த நிர்வாகத்தை அளிப்பேன். அரசியல் சார்ந்து செயல்படாமல் ஆட்சியில் உள்ள மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே செயல்படுவேன்". இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.

இதனிடையே பிபின் ராவத்தை ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப்படை தளபதி பதாரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் சந்தித்தனர்.
முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்று கொண்ட பிபின் ராவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.