Published on 24/07/2019 | Edited on 24/07/2019
கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் கடந்த 17 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு நேற்று மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதனையயடுத்து விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோருவோம் என பாஜக மூத்த தலைவர் முரளிதர ராவ் தெரிவித்தார். இந்நிலையில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து எடியூரப்பா ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.