Skip to main content

 ‘பாஜக ஆட்சியை கவிழ்க்காது’- எடியூரப்பா

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
yedyurappa


மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த இரண்டு சுயேட்சைகள் தற்போது பின்வாங்கியிருப்பதால், மீண்டும் கர்நாடக அரசியலில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான நிலையில், குருகிராமுக்கு சென்ற பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்திருந்தார்.
 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்யாது என்று எடியூரப்பா தற்போது தெரிவித்துள்ளார். 
 

மேலும், ஆட்சியை பாஜக கவிழ்த்து விடுமோ என காங்கிரஸ் - மஜத கவலைப்பட தேவையில்லை. கர்நாடகாவில் நிலவும் வறட்சியை ஆய்வு செய்யவே டெல்லியில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வரவழைத்துள்ளதாக பேட்டியளித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

எடியூரப்பாவின் பேத்தி சடலமாக மீட்பு!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Yediyurappa's granddaughter

 

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யாவின் உடல், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டதாக  கூறப்படுகிறது.

 

மருத்துவரான சௌந்தர்யாவுக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீரஜ் என்ற மருத்துவரோடு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சௌந்தர்யாவின் உடல் பிரதேச பரிசோதனை செய்யப்படும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

 

 

Next Story

தந்தையைத் தொடர்ந்து மகளுக்கும் கரோனா பாதிப்பு!! இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதி...

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

yedyurappa daughter tested positive for corona

 

 

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகளும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று ஒரேநாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் கரோனா உறுதி செய்யப்பட்ட எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள பழைய விமான நிலையம் அருகே இருக்கும் மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், எடியூரப்பாவைத் தொடர்ந்து அவரது மகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனை, அவருக்கும் கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, எடியூரப்பா சிகிச்சை பெறும் அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.