Published on 31/10/2018 | Edited on 31/10/2018
பிரதமர் மோடி தற்போது குஜராத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார். இந்த 143வது சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திறக்கப்படுகிறது. சுமார் ரூ. 2900 கோடி செலவில் உலகின் உயர்ந்த சிலையான இந்த சிலை கட்டப்பட்டுள்ளது. குஜராத்திலுள்ள நர்மதா அணைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள இந்த சிலை திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள் வந்துள்ளனர். அதேபோல அந்த பகுதியில் பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டும் இருக்கிறது. இந்த சிலை திறக்கப்பட்ட பின்னர், ஒரு நாளுக்கு 15,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.