Published on 20/04/2022 | Edited on 20/04/2022

கர்நாடகாவில் காட்டு யானை ஒன்று ஒரே பிரசவத்தில் இரண்டு யானை குட்டிகளை ஈன்றெடுத்தது.
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் பழைய டிக்கெட் கவுன்டர் என்னுமிடத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு காட்டு யானை கூட்டம் ஒன்று சுற்றித்திரிந்து. அதில் சுற்றித்திரிந்த பெண் யானை 2 குட்டிகளை ஈன்றது. தாய் யானையும் இரண்டு குட்டி யானைகளும் பாதுகாப்பாக இருப்பதாக பந்திப்பூர் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை பொறுத்தவரை யானை ஒரே நேரத்தில் இரண்டு குட்டிகளை பெற்றெடுப்பது என்பது இது இரண்டாவது முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த யானை குட்டிகள் அதிசய பிறவிகளாகவே பார்க்கப்படுகிறது. இரண்டு குட்டி யானைகள் தாய் யானையின் அன்பின் நிழலில் பொடி நடைபோடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.