
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் பெண் அகோரி ஒருவர் நிர்வாணமான நிலையில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோவிலுக்கு நாள்தோறும் அதிகப்படியான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாகசாது என்று பெண் அகோரி பல்வேறு கோவில்களுக்கு கார் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் நிர்வாணமான நிலையில் காளஹஸ்தி கோவிலுக்கு வருவதற்காக தன்னுடைய காரில் நான்கு மாத வீதியில் வந்து கொண்டிருந்தார். அவரை அங்கிருந்த ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். தாங்கள் நிர்வாணமாக இருப்பதால் கோவிலுக்குள் வர முடியாது என தெரிவித்த நிலையில், அங்கிருந்த ஊழியர்களிடம் அந்த பெண் அகோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் அகோரி திடீரென அவருடைய காரில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீதும், கார் மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து. தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் அகோரியை அங்கிருந்து காவல்துறையினர் தடுத்து அவர் மீதும் காரின் மீதும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் அங்கிருந்த பெண் ஊழியர்கள் அவருக்கு ஆடைகளை அணிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.