நாடு முழுவதும் தற்போது கடுமையான குளிர் நிலவி வரும் சூழ்நிலையில், வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் குளிர் நிலவி வருகிறது. புதுதில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இரவு நேரங்களில் சில மாநிலங்களில் குளிர் 10 டிகிரி வரை இருக்கின்றது. குறிப்பாக புதுதில்லியில் முன் எப்போது இல்லாத அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. நேற்று உச்சகட்டமாக 2 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருந்துள்ளது. இதுவரை வட மாநிலங்களில் குளிரின் காரணமாக 60 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் வட மாநிலங்களை சேர்ந்த மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் மைனஸ் 5 டிகிரிக்கு மேல் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் இயல்பு வாழக்கை கடுமையாக பாதித்துள்ளது. நேற்று பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணை மருத்துவமனை கூட்டி செல்ல முடியாத நிலையில் குளிரும், பனியும் இருந்ததுள்ளது. ராணுவ வீரர்கள் 4 மணி நேரம் கடுமையாக முயற்சி செய்து அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்த சம்பவம் காஷ்மீரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.