Published on 03/05/2019 | Edited on 03/05/2019
ஃபோனி புயலின் போது பிறந்த குழந்தை ஒன்றிற்கு ஃபோனி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான ஃபோனி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷா நோக்கி நகர்ந்து கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்த்பாலி இடையே இன்று காலை புயல் கரையை கடக்கத் தொடங்கியது.
ஃபோனி புயலால் ஒடிஷா மாநிலம் புரியில் 142 கிமீ முதல் 174 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கடந்ததில்லை. கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையான புயலாக ஃபோனி புயல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் புயல் கரையை கடந்தபோது ரயில்வே மருத்துவமனையில் பெண் ஊழியர் ஒருவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஃபோனி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.