மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் 'டம்டம்' பகுதியை சேர்ந்த 'பதிக்ரித் சஹா ' என்பவர் மாநகர முனிசிபல் கார்ப்ரேஷனில் பணியாற்றி வருகிறார். அப்போது வறுமையில் வாடும் ஏழைக் குழந்தைகளைக் கண்டு மிகவும் மனமுடைந்த பதிக்ரித் அவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று முனைப்போடு இருந்துள்ளார். ஏழை குழந்தைகளுக்கு முழு நேர சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் மாநகராட்சியில் பணி புரிந்து வந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் வயிற்றுப் பிழைப்பிற்காக ஸொமாட்டோ "ZOMATO" உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் டெலிவரி எக்ஸிக்யூட்டிவாக வேலை செய்து வந்துள்ளார். அங்கு ஆர்டர் செய்யும் உணவுகளை வாடிக்கையாளர்கள் கேன்சல் செய்தால், அந்த ரெஸ்டாரண்டிற்கும் பணம் சென்றுவிடும்.
ஆனால், அந்த உணவுகள் வீணாகும் . இல்லையெனில் உள்ளே வேலை செய்யும் பணியாட்கள், டெலிவரி பாய் ஆகியோர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பதிக்ரித்தின் சேவைக்கு உதவும் வகையில் அந்த உணவை விட்டுக் கொடுத்து விடுகின்றனர். அவரும் 'ஃபீடிங் இந்தியா' என்னும் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து கேன்சல் செய்யப்பட்ட உணவுகள், மீதமுள்ள உணவுகளை வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். மேலும் குழந்தைகள் காப்பகங்களுக்கும் உணவுகள் வழங்கி வருகிறார்.
அந்தக் குழந்தைகளும் அவரை செல்லமாக ’மாமா’ என்று அழைக்கின்றனர். மேலும் அவர் ’ஹெல்ப் அசோசியேஷன்’ (HELP ASSOCIATION) என்னும் பெயரில் தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார். இதன் மூலம் வரும் பணத்தை வைத்து ஏழை குழந்தைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். அவர்களுக்குத் தேவையான உடைகளையும் வாங்கித் தருகிறார்.