Published on 16/02/2019 | Edited on 16/02/2019
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த தாங்குதலுக்கு சரியான பதிலடி தர வேண்டும் என கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்குவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்நிலையில் இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் எப்போது வேண்டுமானாலும் இந்திய ராணுவம் பதில் தாக்குதலுக்கு தயாராகலாம் என்ற நிலை நிலவி வருகிறது.