Skip to main content

காவிநிற வள்ளுவர் படத்தை டிவிட்டரில் இருந்து நீக்கிய வெங்கையா நாயுடு...!

Published on 16/01/2020 | Edited on 16/01/2020

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில், "சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனித குலத்திற்கு வழிகாட்டுகிறது" என்று பதிவிட்டிருந்தார்.

 

venkaiah naidu tweet about thiruvallur

 



அதுமட்டும் இல்லாமல் திருவள்ளுவர் பற்றிய ஆங்கில பதிவிற்கு காவி நிற உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தியிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டத்து. மேலும் அந்த பதிவிற்கு கீழ் திமுக எம்பி செந்தில் குமார் "திருவள்ளுவரைக் குறிப்பிட்ட மதம், சாதிக்குள் அடையாளப்படுத்தும் விதமாக, காவி உடையணிந்த புகைப்படத்தை தயவு செய்து நீக்குங்கள். அவர் எல்லோராலும் கொண்டாடப்படுபவர்" எனப் பதிவிட்டுள்ளார்.



இதையடுத்து சிறிது நேரத்திலேயே வெங்கையா நாயுடு காவி உடை அணிவித்திருந்த திருவள்ளுவர் படத்தை நீக்கிவிட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டார். 

சார்ந்த செய்திகள்