Skip to main content

புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்பு

Published on 11/08/2017 | Edited on 11/08/2017
புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்பு

இன்று காலை 10 மணியளவில், புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஹமீது அன்சாரியின் பதவிகாலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில், காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 771 வாக்குகளில் 516 வாக்குகளை பெற்ற வெங்கய்ய நாயுடு, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றார்.னனனனனனன

சார்ந்த செய்திகள்