Skip to main content

கர்நாடகாவில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகும் - அதிர்ச்சி தரும் ஆய்வு!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

karntaka

 

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கர்நாடகா மாநிலத்திலும் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது.  அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரும் கர்நாடகா மூன்றாவது கரோனா அலைக்குள் நுழைந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தைச் சேர்ந்த சிவ ஆத்ரேயா மற்றும் இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ராஜேஷ் சுந்தரேசன் ஆகிய இரு ஆய்வாளர்களும் நடத்திய ஆய்வில், கரோனா பரவல் என்பது நல்ல நிலையில் இருந்தால் பிப்ரவரி மாதத்தில் கர்நாடகாவில் தினசரி 40 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்படும் கணிக்கப்பட்டுள்ளது.

 

ஒருவேளை நிலைமை மோசமானால், கர்நாடகாவில் ஒரு நாளைக்கு 1.3 லட்சம் கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் எனவும் அந்த ஆய்வு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்