அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான ஃபோர்டு (ford), இந்தியாவில் சென்னையிலும், குஜராத் மாநிலத்தின் சனந்த் நகரிலும் வாகன உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது. இந்தநிலையில் இந்தியாவில் உள்ள இந்த இரு ஆலைகளையும் மூடப்போவதாக போர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சனந்த் நகரில் உள்ள ஆலையையும், 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சென்னையில் உள்ள ஆலையையும் மூடப்போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ள அந்தநிறுவனம், நீண்டகால இலாபத்திற்கான ஒரு நிலையான பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஃபோர்டு ஆலைகள் மூடப்படுவதால் சுமார் 4000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கருதப்படுகிறது. ஃபோர்டு நிறுவனம் 90களின் இடைப்பகுதியிலிருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி ஆலையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.