![veerapa moili](http://image.nakkheeran.in/cdn/farfuture/Dm59hJ3slWFelVHEUjtBnRpsu1bGkf4AFvXqiBaKT34/1547919348/sites/default/files/inline-images/veerapa-moili.jpg)
மஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த இரண்டு சுயேட்சைகள் தற்போது பின்வாங்கியிருப்பதால், மீண்டும் கர்நாடக அரசியலில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான நிலையில், குருகிராமுக்கு சென்ற பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்திருந்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்யாது என்று எடியூரப்பா தற்போது தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சியை பாஜக கவிழ்த்து விடுமோ என காங்கிரஸ் - மஜத கவலைப்பட தேவையில்லை. கர்நாடகாவில் நிலவும் வறட்சியை ஆய்வு செய்யவே டெல்லியில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வரவழைத்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். அதேபோல நேற்றிரவு ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இன்று மதியம் ஆலோசனை நடைபெற்றது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, ‘கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வலுவாக உள்ளது, 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்’ என்று கூறியுள்ளார்.