காங்கிரஸ் மாணவர் அமைப்பான தேசிய மாணவர்கள் சங்கம் வாரணசியிலுள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், துணை தலைவர், பொதுச் செயலாளர், நூலகர் போன்ற பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய மாணவர்கள் சங்கம் நான்கு பதவிகளிலும் வென்றுள்ளது.
தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிட்ட காங். மாணவர்கள் அமைப்பை சேர்ந்த சிவம் சுக்லா அவரை எதிர்த்து ஏபிவிபி சார்பாக போட்டியிட்ட ஹர்சித் பாண்டேவைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். சிவம் சுக்லா 709 வாக்குகள் எடுக்க, ஹர்சித் பாண்டே 224 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சந்தன்குமார் மிஸ்ரா 553 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அவினாஷ் பாண்டே 487 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். நூலகர் பதவிக்கு போட்டியிட்ட 482 வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.