Skip to main content

ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020
பர

 

 

ஆறு மாத இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் ஆந்திரா, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

 

உலகம் முழுவதும் கரோனா உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. உலக நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசி சோதனைகள் பரிசோதனையில் இருந்தாலும் இதுவரை பரிபூரண வெற்றி கிடைக்கவில்லை. சில நாடுகளில் தற்போதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இந்த கரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசு பள்ளிகளை திறக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், ஆந்திரா, அசாம், ஹரியானா, மேகாலாயா, காஷ்மீர், நாகாலாந்து, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்