Published on 22/09/2022 | Edited on 22/09/2022

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
வர்த்தக தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து 80 ரூபாய் 28 காசுகளானது, நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு 79.97 ரூபாயாக நிறைவடைந்திருந்தது. இதற்கு அமெரிக்க மைய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களை 0.75% உயர்த்தி உள்ளதே காரணமாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியப் பங்கு சந்தைகளும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செஸ் 483 புள்ளிகள் சரிந்து 58,973 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப் டி 137 புள்ளிகள் வீழ்ச்சிக் கண்டு 17,580 புள்ளிகளிலும் வர்த்தகமாகியது.