Skip to main content

தேசம் வெட்கப்பட வேண்டும்! - தலித் சிறுவர்கள் மீதான தாக்குதலுக்கு வைரமுத்து கண்டனம்

Published on 15/06/2018 | Edited on 15/06/2018

பொது கிணற்றில் குளித்த தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி சித்தரவதை செய்ததற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

vairamuthu

 

 

 

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ளது வகாடி கிராமத்தில், தலித் அல்லாத மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கிணற்றில், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சிறுவர்களை கிணற்றில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களை நிர்வாணப்படுத்தி குச்சிகள் மற்றும் பெல்ட்டுகளால் அடித்து சித்தரவதை செய்தது மட்டுமின்றி, அந்த சிறுவர்களை நிர்வாணமாக ஊரை வலம்வரச் செய்துள்ளனர்.
 

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த கொடூர சம்பவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 
 

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில், ‘மராட்டியத்தில் 
கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். 
குளிக்கவில்லையே என்று தலித்துகளை முன்பு தண்டித்தார்கள். குளிக்கிறார்களே என்று இன்று தண்டிக்கிறார்கள். தேசம் எழுந்து நின்று வெட்கப்பட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்