Skip to main content

ஹாக்கி மைதானத்திற்கு வந்தனா கட்டாரியா பெயர் - உத்தரகண்ட் முதல்வருக்கு அமைச்சர் கோரிக்கை!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

vandana katariya

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில், காலிறுதிக்குக் கூட செல்லாது எனக் கூறப்பட்ட இந்திய மகளிர் அணி அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தது. மகளிர் அணியின் இந்த சாதனையில் முக்கிய பங்காற்றியவர் வந்தனா கட்டாரியா. மேலும், இந்த ஒலிம்பிக்கில் அவர் ஹாட்ரிக் கோல் அடித்ததின் மூலம், ஒலிம்பிக்ஸில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

 

இதனையடுத்து வந்தனாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கிடையே வந்தனாவை பாராட்டி, அவரது சொந்த மாநிலமான உத்தரகாண்ட்டின் மாநில அரசு, அவருக்கு 25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தது.

 

மேலும் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, வந்தனாவை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத் துறையின் தூதுவராக நியமித்தார். இந்தநிலையில் ஹரித்வாரின் ரோஷ்னாபாத்தில் அமைந்துள்ள ஹாக்கி மைதானத்திற்கு வந்தனா கட்டாரியாவின் பெயரை சூட்ட வேண்டும் என உத்தரகண்ட் அமைச்சர் சுவாமி யதீஸ்வரானந்த், அம்மாநில முதல்வர்  புஷ்கர் சிங் தாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்