பிரபல ஆன்லைன் வீடியோ தளங்களான நெட்ஃப்லிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
திரைப்படங்கள், சீரிஸ்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை வெளியிடும் இந்த தளங்கள், இந்திய கலாச்சாரத்தை தவறாக சித்தரிப்பதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. குறிப்பாக மிஸ் மேட்ச், சேக்ரட் கேம்ஸ், மாயா 2, லஸ்ட் ஸ்டோரிஸ், சேக்ரட் கேம்ஸ் உள்ளிட்ட சீரிஸ்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மத நம்பிக்கைகளை விமர்சிப்பதுபோல உள்ளது என சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் நெட்ப்லிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசவிரோத மற்றும் இந்துவிரோத கருத்துகளைக் கொண்ட தொடர்களை வெளியிடுவதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக உண்மையான இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான தொடர்களை வெளியிடுமாறும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.