முதல் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக் கொள்வதற்காக நாளை (08/10/2019) பிரான்ஸ் செல்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்தியா- பிரான்ஸ் இடையே அதிநவீன ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் முன் வந்துள்ளது. ராணுவ பயன்பாட்டுக்காகக் வடிவமைக்கப்பட்ட, இந்த போர் விமானத்தை பெற்றுக்கொளவதற்காக பிரான்ஸ் செல்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். ரஃபேல் போர் விமானத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை (08/10/2019) முறையாக ஆயுதபூஜை நடத்தி ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள், ரபேல் விமானம் தயாரித்த டசால்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். ரஃபேல் போர் விமானத்தை இந்தியா வாங்குவதன் மூலம், இந்திய ராணுவத்தின் பலம் மேலும் அதிகரிக்கும்.