Published on 30/09/2022 | Edited on 30/09/2022

அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக, காரில் சென்றுக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னாள் அவசரமாக வந்துக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடுவதற்காக, பாதுகாப்பு வாகனங்களுடன் சாலையோரம் ஒதுங்கி வழிவிட்டுள்ளார். இது தொடர்பான, காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்வே தொடக்கம், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள அகமதாபாத்தில் இருந்து காந்தி நகருக்கு சென்றுக் கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.