Skip to main content

மூன்று நிமிட மீட்டிங்... வேலையை விட்டுத் தூக்கப்பட்ட 3,700 பேர்... பிரபல நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி...

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

uber fired 3700 employees in three minute meeting

 

பிரபல கால் டாக்ஸி நிறுவனமான ஊபர், முன் அறிவிப்பு ஏதுமின்றே தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 3700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், சிறு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்து துறைகளைச் சார்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் இறங்கு முகத்தில் காணப்படுகின்றன. இந்த எதிர்பாரா நிதி நெருக்கடி நிலையைச் சமாளிக்க நிறைய நிறுவனங்கள் சம்பளக் குறைப்பு மற்றும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 3,700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது' ஊபர்' நிறுவனம்.


அதுவும் ஊழியர்களுக்குச் சரியான முன்னறிவிப்பு இன்றி, Zoom ஆப்பின் மூலமாக மூன்று நிமிடத்தில் திடீரென அனைத்து ஊழியர்களிடமும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதவிர வேலையை விட்டு நீக்கப்பட்டதற்கு ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊபர் ஊழியர்களின் எண்ணிக்கை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையில் 14 சதவீதம் ஆகும். சரியான வழிமுறைகளைக் கூட பின்பற்றாமல் தங்களைத் திடீரென பணியைவிட்டு நீக்கியது அந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்