Skip to main content

ஊழியர்கள் எதிர்ப்பு: வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

BANKS

 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்தார். இதற்கு வங்கி ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

 

இதனையடுத்து வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் சங்கங்கள் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.

 

வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமையான இன்றும், ஞாயிற்றுக் கிழமையான நாளையும் வங்கி ஊழியர்களுக்கு வழக்கமான விடுமுறையாகும். அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி ஊழியர்கள் பணியில் ஈடுபடமாட்டார்கள். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாமக்கல் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
CM MK Stalin fulfilled the demand of the people of Namakkal 

நாமக்கல் மாவட்டம் கடந்த 1997 ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகையின் எண்ணிக்கை 17 லட்சத்து 26 ஆயிரத்து 601 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில், நாமக்கல் மாவட்டம், கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள் என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 98.70 கோடி ரூபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 55.15 கோடி ரூபாய் பங்குத்தொகையுடன் இவ்வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், 2020-21 ஆம் ஆண்டில் 22.17 கோடி ரூபாய், 2021-22 ஆம் ஆண்டில் 20.37 கோடி ரூபாய் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 18.24 கோடி ரூபாய் என தொடர்ந்து லாபம் ஈட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட முதலமைச்சர் ஆணையிட்டார். இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி இன்று (6.3.2024) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Chennai Corporation budget tabled today

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம்(19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நேற்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (21-02-24) தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான விரிவான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், ‘மக்களை தேடி மேயர்’ உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (21-02-24) காலை 10 மணிக்கு மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். 

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளி, கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீதான விவாதம் நாளை (22-02-24) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.