Skip to main content

8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது - ராகுல்காந்தி

Published on 29/04/2018 | Edited on 29/04/2018

8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 

டெல்லியில் நடைபெற்ற மக்கள் கோப ஆவேசப் பேரணியில் பேசிய அவர் 

மோடி ஆட்சியில் ஊழல் அமைச்சர்களின் ஆதிக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. மக்களின் பணத்தை வைர வியாபாரி நீரவ் மோடி எடுத்துச் சென்றுவிட்டார் ஆனால் வங்கி பணம் மோசடி செய்த நீரவ் மோடியை மத்திய அரசு காப்பற்றி வருகிறது.  ஊழல் புகாருக்கு ஆளானவரை கர்நாடக முதல்வராக்க  பா.ஜ.க முயற்சித்து வருகிறது.

 

rahul

 

 மேலும் நரேந்திர மோடி  மக்கள் பிரச்சனைக்கு பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார்.  ரஃபேல் போர் விமானங்களை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளார் ஆனால் ஒருபக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு மோடி எதற்காக அமைதி காக்கிறார்? இவ்வாறு பல கேள்விகளை முன்வைத்து பேசினார்.

சார்ந்த செய்திகள்