மகிந்திரா நிறுவனத்தின் நிறுவனரும், இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களின் ஒருவருமான ஆனந்த் மகிந்திரா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவே இருப்பார்.
புதுமையான கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து, அதனை பாராட்டுவதோடு அந்த கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்தவர்களை அங்கீகரிக்கவும் ஆனந்த் மகிந்திரா தவறியது இல்லை.
அதன்படி, அண்மையில் ஆனந்த் மகிந்திரா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. அந்த வீடியோ, எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டும், வியப்படையவும் செய்திருக்கிறது.
அந்த வகையில், 'மேரேஜ் ஹால் ஆன் வீல்' என்ற புதுமையான கண்டுபிடிப்பு தான் ஆனந்த் மகிந்திராவை பெரிய அளவில் பாராட்ட செய்திருக்கிறது. அதில், பெரிய டிரக் வாகனம் ஒன்றை 200 பேர் பங்கேற்கும் வகையில், திருமண மண்டபம் போன்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. 40- க்கு 30- க்கும் என்ற சதுரஅடி அளவில், இந்த மொபைல் திருமண மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதில், திருமண மேடை, விருந்தாளிகள் உட்காரும் பகுதி என ஏ.சி. உள்ளிட்ட சகல வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, இந்த புதுமையான கண்டுபிடிப்பிற்கு மூலையாக இருந்தவரைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். மிகவும் அற்புதமான சிந்தனை மிக்க படைப்பாக இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும், இந்த மொபைல் திருமண மண்டபத்தை கொண்டு செல்லலாம் என்பதைக் காட்டிலும் பொருளாதார ரீதியாக பெரியளவில் மக்களுக்கு உதவிக் கரமாக இருக்கும் என காபிஷன்ஸ்யிட்டு இருக்கிறார்.