Skip to main content

டோல்கேட் ஊழியரைக் கதறவிட்ட லாரி ஓட்டுநர்!

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

The truck driver who knocked down the Tolkien employee!

 

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், குத்தி டோல்கேட்டில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி நேற்று (27/04/2022) நிற்காமல் சென்றுவிட்டது. எனவே, டோல்கேட் ஊழியர்கள் ஒரு லாரி ஓட்டுநர் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்று விட்டதாகவும், அந்த லாரியை நிறுத்தும்படியும் அமகதாடு டோல்கேட்டுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அமகதாடு சுங்கச்சாவடி அருகே லாரி மெதுவாக வந்தது. அப்போது, ஊழியர் சீனிவாஸ் லாரியை நிறுத்தி லாரியின் முன்புறம் ஏறி நின்று ஓட்டுநரிடம் விசாரிக்க முயன்றார். 

 

ஆனால் லாரியின் முன்பகுதியில் சீனிவாசன் ஏறியபோது, ஓட்டுநர் அதனை கண்டுக் கொள்ளாமல் வேகமாக ஓட்டி சென்றார். உஷாரான டோல்கேட் ஊழியர்கள் நான்கு இரு சக்கர வாகனத்தில் லாரியைத் துரத்திச் சென்றனர். மேலும், நெடுஞ்சாலை காவல்துறையினரும் தகவல் கொடுத்தனர். இதனால் காவல்துறையினரும் லாரியை துரத்தினர். இதனையடுத்து, 10 கிலோ மீட்டருக்கு லாரி சென்ற நிலையில்,வேல்துருத்தி அருகே லாரியை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி சீனிவாசனை மீட்டனர். லாரியில் இருந்து கீழே விழாதபடி, லாரியை இறுக்க பிடித்த திகிலுடன் பயணித்த சீனிவாசன் நிம்மதி பெருமூச்சு விட்டார். 

 

இது தொடர்பாக, லாரி ஓட்டுநரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

 

சார்ந்த செய்திகள்