Skip to main content

நிறுவனங்களின் கார்ப்பரேட் வரியை குறைப்பதாக அருண் ஜேட்லி உறுதி - ஃபிக்கி தலைவர் சந்தீப் சோமானி

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

கார்ப்பரேட் வரி எனப்படும் நிறுவனங்கள் வரியை 25 சதவீத அளவுக்கு குறைப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி அளித்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி.வரியின் வருமானம் அதிகரிக்கத் தொடங்கியவுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜேட்லி கூறியதாக ஃபிக்கி தலைவர் சந்தீப் சோமானி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டுமின்றி அனைத்து துறையினருக்கும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் வரி விதிப்பு ஒரே அளவினதாக்கப்படும் என்று ஜேட்லி கூறியதாக தெரிவித்துள்ளார்.

 

arun jaitley

 

2015-16-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நிறுவன வரி அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஆண்டு வருமானம் ரூ. 50 கோடிக்கும் குறைவாக ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
 

அதேபோல், 2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 250 கோடிக்கும் குறைவான வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதம் என குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்