Skip to main content

பரூக் அப்துல்லா எங்கே..? ராணுவத்தை வைத்து மிரட்டுவீர்களா..? மக்களவையை தெறிக்கவிட்ட டி.ஆர் பாலு!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019


ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை யூனியன் பிரதேசமாக மாற்றும் தீர்மானத்திற்கு பல்வேறு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான சட்ட மசோதா லோக் சபாவில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு  "மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் சட்டத்தை மீறி செயல்படுகிறார். காஷ்மீர் தலைவர்கள் என்ன ஆனார்கள்? எதற்காக அவர்களை வீட்டு சிறையில் வைத்துள்ளீர்கள் என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்" என்றார். அவரின் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
 

balu




மேலும் பேசிய அவர் "உமர் அப்துல்லாவும், மெகபூபா முப்தியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நாடாளுமன்றம் வர வேண்டிய பரூக் அப்துல்லாவும் வரவில்லை. அவர்கள் நிலைமை என்ன? நாட்டில் என்ன எமர்ஜென்சியா நடக்கிறது? ராணுவத்தை துணையாக வைத்து கொண்டு மத்திய அரசு ஒரு சட்டத்தை நீக்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியதை அவசரகதியில் நிறைவேற்றி உள்ளீர்கள். காஷ்மீரில் இதற்கு முறையான தேர்தலை நடத்தி மக்களின் கருத்தை கேட்ட பின்புதான் இது நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏன் அதை செய்யவில்லை?" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

 
News Hub